ranil
இந்தியாசெய்திகள்

நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் – ஜனாதிபதி பெருமிதம்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற   சர்வதேச   அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை  வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின்  நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) விடுத்துள்ள விசேட  உரையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை, அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இனிமேல் இந்த  உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான உடன்படிக்கை நாளை (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...