lakshman kiriella
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது! – அழுத்திக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Share

” சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கும் அரசால் ஒருபோதும் சர்வதேச ஒத்துழைப்பை பெறமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

” நல்லாட்சிமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இருந்தது. தேசிய கீதம்கூட தமிழில் இசைக்கப்பட்டது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள்கூட உரிய இடத்தை வழங்கினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

சிவில் அமைப்புகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அறிக்கை விட்டால், அது தொடர்பில் சிஐடிக்கு அழைக்கப்பட்டு விளக்கம்கோரும் நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்கூட இவ் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...