தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட் இறக்குமதி செய்துள்ளது. ஆனால் வடக்கில் விவசாயிகள் பீட்ரூட் அறுவடை செய்யவுள்ள நிலையில் இறக்குமதி செய்துள்ளனர்
இலங்கை அரசாங்கமும், விவசாய அமைச்சும் வேண்டுமேன்றே இவ்வாறு பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட்டை இறக்குமதி செய்துள்ளது , இது எமது விவசாயிகளின் வருமானத்தை இழக்கச் செய்யும் செயற்பாடாகும்
நேற்று கிளிநொச்சியில் ஊடகங்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் விவசாய அறுவடைகள் செய்யப்படும் தருணங்களில் பொதுவாக இறக்குமதி வரி அதிகரிக்கப்படும், எனினும் இம்முறை இதற்கு நேர்மறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீட்ரூட் இறக்குமதியை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
#srilankanews
Leave a comment