Pushpika de Silva
செய்திகள்இலங்கை

உலக அழகி போட்டியில் அநீதி! – இலங்கை பெண் புஷ்பிகா டி சில்வா

Share

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அதில் கலந்து கொண்ட போட்டியாளர் புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அப் போட்டியில் அநீதிகள் இழைக்கப்பாடமல் இருந்திருந்தால் நானே திருமதி அழகுராணி மகுடத்தை வென்றிருப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கிலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனிதர்களாகிய நம்மை அனைவருக்கும் மேலாக கடவுளும் இயற்கையும் சோதிக்கும் நேரம் இது. கொரோனா வைரஸ் போன்றவற்றின் மூலம் அமைதி, தியாகம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய தருணம் இது.

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த திருமதி உலக திருமண அழகி போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு நான் இறுதிச் சுற்று வரை வெற்றிகரமாகப் போட்டியிட்டேன். எனினும் சில தரப்பிலிருந்து அநீதி இழைக்கப்பட்டது. வழக்கம் போல் எனக்கு கிடைக்க வேண்டிய அவ் வெற்றியை இழக்க செய்தவரை கடவுள் மன்னிக்கவும்.

ஆனால் கடவுளின் முடிவை மாற்ற முயன்ற ஒரு மனிதனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...