சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 01 இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீமெந்து மூடைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளும் அடுத்த ஓரிரு வாரங்கள் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
சீமெந்து மூடைகளுக்கான தட்டுப்பாடுகள் நீங்கியதும் 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றை 1,275 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment