நாட்டில் சுமார் 5 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 200 பேர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா காரணமாக 52 கர்ப்பிணித் தாய்மார்கள் இறந்துள்ளனர்.
மே 2021 க்குப் பின்னரே கர்ப்பிணித் தாய்மார்களின் அனைத்து கொரோனா இறப்புகளும் பதிவாகியுள்ளன, 90 வீதமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
எனவே கொரோனாத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கலந்தாழ்த்தாது பெற்றுக்கொள்ளுமாறு கர்ப்பிணித் தாய்மார்களிடம் கோருகிறேன் என – அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a comment