சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று இந்திய இளம் பெண் சாதனை!

aq

shooting competition

பெருவில் இடம்பெற்று வரும் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், 14 வயதுடைய இளம் இந்தியப் பெண், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி இடம்பெற்று வருகிறது.இந்தப் போட்டித் தொடரில், இந்தியா 8 தங்கப் பதக்கம் உள்ளடங்கலாக 17 பதக்கங்களுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 25 மீற்றர் பிஸ்டல் பிரிவில், 14 வயதுடைய இந்தியாவின் இளம் வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நம்யா கபூர் என்ற இளம் பெண் வீராங்கனையே இவ்வாறு தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இதேவேளை,  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர், குறித்த போட்டியில் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version