நடாக் பெல் கி கோர்லோ விருதை பெறும் இந்திய பிரதமர்..!!

1639724135756

பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு   வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பில்  பூடான் பிரதமர் லோடே ஷெரிங் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

குறித்த பதிவில் “ பூடான் நாட்டின் மிக உயரிய விருதான நாடாக் பெல் கி கோர்லா விருதுக்கு பிரதமர் மோடிக்கு வழங்குவது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், பூடானுக்கு 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்திருந்தார் .

Exit mobile version