gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

Share

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது ‘மனக்கசப்புடன் பணிபுரிதல்’ (Resenteeism) எனப்படும் ஒரு விசித்திரமான உளவியல் மாற்றம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் 46 சதவீதமான இளைஞர்கள் அதீத வேலைப்பளு (Burnout) காரணமாக வேலையை விட்டு விலகத் திட்டமிடுகின்றனர். ஆனால், இந்தியாவில் நிலைமை மாறுபட்டுள்ளது. வேலையில்லாப் பிரச்சினை மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக, வேலையை விட்டு விலகுவது ஒரு சலுகையாகவே (Luxury) பார்க்கப்படுகிறது.

வேலையை விடுவது தோல்வியாகக் கருதப்படுவதால், பல இளைஞர்கள் விருப்பமில்லாத வேலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

உளவியலாளர் ரித்திகா குப்தா மற்றும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதன் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்வது, மேலதிக முயற்சிகளை எடுக்காமல் இருப்பது. நிறுவனத்தின் இலக்குகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.

“வேலை தங்களை நேசிக்கும்” என்ற நம்பிக்கையை அவர்கள் முழுமையாகக் கைவிட்டுள்ளனர்.

“இளம் பணியாளர்கள் கௌரவமான வேலை, நெகிழ்வுத்தன்மை (Flexibility) மற்றும் மன அமைதியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நிறுவனங்கள் இன்னும் பழைய படிநிலை முறைகளையும், நீண்ட நேர வேலைகளையும் வலியுறுத்துகின்றன,” என பேராசிரியர் கலாநிதி உமேஷ் கோத்தாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறுவனங்களை விட்டு ஊழியர்கள் வெளியேறுவதை விட, அவர்கள் ஆர்வமின்றி நிறுவனத்தில் தங்கியிருப்பதே (Resenteeism) எதிர்கால உற்பத்தித்திறனுக்குப் பாரிய அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...