1766303338 Sri Lanka Colombo air quality index 6
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி: 200 வரை அதிகரித்த தரக்குறியீடு!

Share

இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் அபாயகரமான அளவில் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன இது குறித்துத் தெரிவிக்கையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமற்ற ஒரு நிலையாகும். எல்லை கடந்த காற்று இயக்கம் (Transboundary air pollution) மற்றும் தற்போது நிலவும் வடகிழக்கு பருவமழை கால நிலை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறைந்துள்ளதால் சுவாசம் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அசௌகரியங்கள் அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுமாயின், உடனடியாகத் தாமதிக்காமல் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...

bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...