இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. இதன்படி, எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரையில் அவர் இலங்கைக்கு வியஜம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நியூயார்க்கில் சந்தித்து பேசியிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment