3 படகுகளுடன் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு மலேரியா, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி நீரியள் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்படவுள்ளனர்.

IMG 20220208 WA0016

#SriLankaNews

Exit mobile version