இந்திய படகுகள் ஏலம்! – இன்று காங்கேசன்துறை துறைமுகத்தில்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்றையதினம் காரைநகரில் 135 இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் காங்கேசன்துறையில் 5 படகுகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG 20220208 WA0004

#SriLankaNews

Exit mobile version