சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம்!- ராமேஸ்வர மீனவர்கள்

INDIA superJumbo

எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர், மெரைன் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தின் போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதால் இலங்கை இந்திய மீனவர்கள் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேசி நடுக்கடலில் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கையொன்றினையும் முன்வைத்துள்ளனர்.

#India

Exit mobile version