இந்தியா- தமிழ்நாடு தேனி பெரியகுளத்தில் பழைய புரோட்டாவை நீரில் ஊற வைத்து சூடேற்றி, புதிது போல விற்றதுடன், உரிமம் பெறாமலும் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு, உணவக உரிமையாளருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சட்டப்படி அந்த உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
#IndiaNews