தடுப்பூசி செலுத்த வந்தவரை அடித்து உதைத்த நபர் (வீடியோ)

Corona vaccine

உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த மறுத்த படகோட்டி, ஒருவர் சுகாதாரப் பணியாளருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காணொளி வெளியாகியுள்ளது.

பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த படகோட்டியை பணியாளர்கள் தடுப்பூசி செலுத்துதற்கு அழைத்துள்ளனர்.

அப்போது ,, படகில் ஏறி அமர்ந்து கொண்டு பிடிவாதம் செய்த அவர், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சில வினாடிகளில் படகில் இருந்து குதித்து, சுகாதார பணியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தண்ணீருக்குள் வீசி விடுவேன் என கூறியதுடன், அந்த பணியாளரை நீருக்குள் இழுத்து செல்லவும் முயன்றுள்ளார்.

இருப்பினும் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை சமரசப்படுத்தி, போராடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.


#IndiaNews

Exit mobile version