சாரதிக்கு திடீர் மயக்கம்: வீட்டின் மீது மோதியது பேருந்து!!

Accident 6

இந்தியா-தமிழ்நாடு கடலூர் அரசுப் பேருந்தானது, வீதியோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது குறித்த பேருந்தின் சாரதிக்கு தீடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது, வீதியோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வீட்டின் அருகே இருந்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மயக்கமடைந்த சாரதிக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#IndiaNews

Exit mobile version