Accident 6
இந்தியாசெய்திகள்

சாரதிக்கு திடீர் மயக்கம்: வீட்டின் மீது மோதியது பேருந்து!!

Share

இந்தியா-தமிழ்நாடு கடலூர் அரசுப் பேருந்தானது, வீதியோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது குறித்த பேருந்தின் சாரதிக்கு தீடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது, வீதியோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வீட்டின் அருகே இருந்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மயக்கமடைந்த சாரதிக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 196
செய்திகள்இந்தியா

டைம் 100 – 2026: உலகின் மிகச் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியல் வெளியீடு!

உலகின் மிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களைக் கொண்ட 2026-ஆம் ஆண்டிற்கான ‘டைம் 100’ (TIME100)...

world 73
செய்திகள்இந்தியா

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய விஜய்: காரைக்குடியில் பேச அனுமதி மறுப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காரைக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், காவல்துறை...