இறந்து போன பெண் மயிலைப் பிரிய மறுத்த ஆண் மயில் (வீடியோ)

Peacock

இறந்து போன பெண் மயிலைப் பிரிய மறுத்து, பின் தொடர்ந்து செல்லும் ஆண் மயிலின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும், 4 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்தது.

இந்தநிலையில், பெண் மயில் திடீரென உயிரிழந்தது.

உயிரிழந்த பெண் மயிலின் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது, பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும்வரை அருகிலேயே இருந்துள்ளது.

இக் காணொளி, காண்போரின் இதயத்தைக் கனக்கவைத்துள்ளது.


#IndiaNews

Exit mobile version