மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
திடீரென இழுவை இயந்திரம் தீப்பிடித்த எரிந்தமையால், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சியடித்து 10 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை மும்பையில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்குப் புறப்பட்ட விமானத்தில் 85 பயணிகள் இருந்தனர் என்றும்அதன் அருகில் நின்ற இழுவை இயந்திரமே இவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழக்கம்போல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaNews
Leave a comment