கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார்.
இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு பணியில் இருந்த வைத்தியர் குறித்த நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
அதன்பின்னர் மருந்து போத்தலை கவனித்தபோது அது கொரோனாவுக்கான தடுப்பூசி அல்ல வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் முறைப்பாடு செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் குறித்த வைத்தியரும் தாதியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment