தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி வேதா இல்ல சாவியை ஒப்படைத்தார்.
இதனையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.
வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் எனத் தெரிவித்தார்.
#IndiaNews