இந்தியா-தமிழகம் தஞ்சாவூரில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 6 மாதக் கைக்குழந்தையை நரபலி கொடுத்த தாத்தா – பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையால் ஆபத்து உங்களுக்கு எனக்கூறி, குறித்த மந்திரவாதி இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நசுருதீன் – ஷாலிகா பேகம் தம்பதியினரின் 6 மாதப் பெண் குழந்தை ஹஜாரா என்ற குழந்தையையே நரபலி கொடுத்துள்ளனர்.
குறித்த குழந்தை நேற்று முன்தினம் முதல் குழந்தையைக் காணவில்லை எனத் தேடி வந்த பெற்றோர், இறுதியில் நசுருதீனின் சித்தி ஷர்மிளா பேகம், குழந்தை தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
6 மாதக் கைக்குழந்தை எப்படி 2 அறைகள் கடந்து வந்து, தண்ணீர் தொட்டியில் விழுந்திருக்கும் என உறவினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் குழந்தையும் உயிரிழந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்வம் குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் கிடுக்குப்பிடி விசாரணையினை மேற்கொண்டனர்.
விசாரணையில், குழந்தையின் பாட்டியான ஷர்மிளா பேகம் அவரது கணவர் அசாருதீனின் உடந்தையோடு, பிஞ்சுக் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்திக் கொன்றமை தெரியவந்துள்ளது.
நீண்ட கால உடல்நலப் பாதிப்பு குழந்தையின் தாத்தாவுக்கு இருந்தமையால், புதிதாகப் பிறந்த ஒரு உயிரை நரபலி கொடுத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என மந்திரவாதி கூறிய பேச்சைக்கேட்டு 06 மாதக் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#IndiaNews
Leave a comment