4 வயது சிறுமியை வீதியில் நின்ற 05 நாய்கள் கடித்துக் குதறியுள்ளது. இதுதொடர்பான சிசிரிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலம்- போபாலில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமியே இவ்வாறு நாய்க் கடிக்குள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வீதியில் தக்க சமயத்தில் வந்த நபர் ஒருவர், நாய்களை கல்லால் அடித்து விரட்டி சிறுமியைக் காப்பாற்றியுள்ளார்.
இருப்பினும் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#IndiaNews
Leave a comment