இந்தியா

கேரளாவில் நடக்கும் பிரமாண்ட படகு போட்டி நாளை நடக்கிறது! ஏராளமானோர் வருகை

1755821 boat
Share

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் 68வது பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் நாளை (4 திகதி) நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க ஏராளமான படகு குழாம் கழகங்கள் தயாராகி உள்ளன. இதுவரை 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளன.

நாளை மதியம் 2.30 மணிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் 3 மணிக்குத் தொடங்குகிறது.

ஹீட் சுற்றுகள் தலா 4 அணிகளுடன் நடத்தப்படும். இதில் முதலாவதாக வரும் அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிடும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாம்பு படகுக்கு நேரு கோப்பை வழங்கப்படுகிறது.

தற்போது வரை டிக்கெட் விற்பனை ரூ.23 லட்சத்தை எட்டியுள்ளது. இது ரூ. 50 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியை காண ஏராளமானோர் கேரளா வந்துள்ளதால் போட் ஹவுசுகள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்துள்ளன.

இந்தப் போட்டியில் பங்கேற்க தலா ரூ.80 லட்சம் வரை படகு குழாம்கள் செலவழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

#kerala

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
10
இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா...

12 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

இந்தியாவின் (India) – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

29 1
இந்தியாசெய்திகள்

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு...

14
இந்தியாசெய்திகள்

சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்!

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது...