10 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்ற போது, சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிட கூடாது என்பதற்காக துஷ்பிரயோகம் செய்தவர் சிறுமியை அருகில் இருந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியை பிடித்து ஒருவாறு உயிர்தப்பி மேலேறி வந்து தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் பொலிஸார் குற்றவாளியைக் கைது செய்து, குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
#IndiaNews

