73cf41c5 d106c1a4 oil tank
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை எண்ணெய் குதங்களை இந்தியா மீள வழங்குமாம்!!!

Share

இந்தியாவின் வசமுள்ள திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சாதகமான முடிவு அடுத்த மாதத்தில் கிடைக்கும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்கள் அடங்கிய திருகோணமலை எண்ணெய்க்குதத் தொகுதி மீண்டும் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 16 மாதங்களாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேற்படி எண்ணெய்க் குதத் தொகுதியை முகாமைத்துவம் செய்வதற்காக பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் மற்றுமொரு நிறுவனமாக ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிட்டெட் என்ற பெயரில் ஒரு நிறுவனமொன்றை நாம் உருவாக்கியுள்ளோம்.

அந்த நிறுவனத்தின் ஊடாகவே மீண்டும் எண்ணெய்க் குதங்களை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எமது நாட்டுக்கு பாதகமான எதிலும் இணக்கம் தெரிவிப்பதற்கோ கைசாத்திடவோ நாம் இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...