இந்திய – சீன பேச்சுவார்த்தை விரைவில்!!

modi xi 6

இந்தியா-சீனா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடாத்துவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எல்லை விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் நெருங்கிய தொடர்பில் இருப்பதற்கும், இராணுவ மற்றும் தூதரக வழிகள் மூலம் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கும், மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் எட்டுவதற்கும் முனைப்புக்காட்டுவதாகவும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாட்டுஇ ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version