பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும், சமவாய்ப்புக்களை வழங்கவும் “மலையக அரசியல் அரங்கம்” தன் ஒருமைபாட்டை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு Search for Common Grounds நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்தபோதே அவர் மேற்படி தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக அரசியல் அரங்க இலட்சினையில் மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்கு தோள்கொடுத்து அரசியல் செயற்பாட்டில் இயங்கிய அவரது துணைவியார் மீனாட்சியம்மையையும் இணைத்துள்ளோம்
பெண்களின் அரசியல் பங்கேற்பினை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம். சம வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றபோதே ஒட்டு மொத்த அரசியல் அரங்கமும் முழுமையடையும் – என சுட்டிக்காடினார்.
#SrilankaNews
Leave a comment