Covid – இந்தியாவில் அதிகரித்துச் செல்லும் தொற்றாளர்கள்!
இந்தியாவில் நேற்று மட்டும் 51 ஆயிரத்து 16 பேர் கொவிட் (covid) தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, 737 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொவிட் காரணமாக விதிக்கப்பட்டிசுந்த கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், மீண்டும் தொற்றாளர்கள் அதிகரித்துச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment