முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசாலையின் ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இரண்டு வயதுச் சிறுமி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மல்லாவி ஆதார வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews