நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 5,391 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஒரு வார காலத்தில் 87 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நேற்று மாத்திரம் 845 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனாவால் 12 மரணங்கள் பதிவாகியுள்ளனர்.
அதேவேளை, நாட்டில் 6 லட்சத்து ஆயிரத்து 886 பேர் வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 76 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 229 பேர் உயிரிழந்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment