AP 20211287643615
செய்திகள்உலகம்

ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் கைது

Share

ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டில் ஈரானின் அணு மற்றும் இராணுவத் தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஈரானின் புஷெர் மாகாணத்தில் மட்டும் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் எந்தெந்த நாடுகளுக்குத் தகவல்களை அனுப்பினார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கைதான 10 பேரும் ஈரானின் விரோத நாடுகளின் உளவு அமைப்புகளுடன் கூட்டாளிகளாகவும், பினாமிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 27
இலங்கைசெய்திகள்

மருத்துவ ஆய்வக உதவியாளர் நியமனத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

இணை சுகாதாரத்துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளர்கள் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது....

17 23
இலங்கைசெய்திகள்

கொழும்பில் அநுர ஆட்சியை முழுமையாக தவிர்க்கும் மொட்டுக்கட்சி

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை என...

18 25
இலங்கைசெய்திகள்

நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று...

1748155548 25 683285c56cf51
இலங்கைசெய்திகள்

உகந்தை மலை புத்தர்சிலை விவகாரம்.. சிறீநேசன் முன்வைத்துள்ள கோரிக்கை

உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை...