கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

colomvo

கொழும்பின் சில பகுதிகளில் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (13) இரவு 8 மணி முதல் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 பகுதிகளிலும் கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை பிரதான நீர்குழாயின் திருத்த வேலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version