கடுகதி தொடருந்து சேவைகள் நாளை (08) முதல் மீpண்டும் ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான அலுவலக தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, இரவு 7 மணியின் பின்னர் தூர மற்றும் குறுந்தூர தொடருந்து சேவைகள் என்பன வழமை போன்று இடம்பெறுவதில்லை.
ஆகையினால், தற்போது நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணியின் பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 180 முதல் 200 தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
#SrilankaNews