மீண்டும் சிக்கல் நிலையில் பால்மா இறக்குமதி!!!

Milk Powder 1

பால்மாவை இறக்குமதி செய்வதில் மீள பிரச்சினை எழுந்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்று தருமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா நிறுவனங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 250 ரூபாவால் அதிகரித்தன.

இதற்கமைய ஒரு கிலோகிராம் பால் 1,195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 400 கிராம் பால்மா 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

#SrilankaNews

Exit mobile version