Champika 04
செய்திகள்இலங்கை

புலம்பெயர்ந்தோர் கைகோர்க்க வேண்டும்! – சம்பிக்க ரணவக்க

Share

கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், இன்று(4) தனியார் விடுதியில் இடம்பெற்ற 43 படையணியின் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர்ந்தவர்கள் எம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தார்கள். ஆனாலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் 2023 ஆம் ஆண்டு இடம்பெறும். அந்த நேரத்தில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிரான செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதைச் சொல்வோம். எங்களுடன் நீங்களும் கைகோர்க்க வேண்டும்.

43 படையணியை நீங்கள் படையணியாக கருதக்கூடாது எதிர்காலத்தில் அரசியலில் வியூகங்களை வகுக்க உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.

1943 நமக்கு கிடைத்த இலவசக் கல்வி அடிப்படையாக கொண்டு 43 படையணி இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எம்முடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...