nisha
செய்திகள்உலகம்

நான் உயிரோடு தான் உள்ளேன் -மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா

Share

நான் உயிரோடு தான் உள்ளேன் என மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில்,  அது போலியான செய்தி என்றும், தான் உயிரோடு இருப்பதாகவும் காணொளி ஒன்றை நிஷா தாஹியா வெளியிட்டுள்ளார்.

“நான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா (GONDA) நகருக்கு வந்துள்ளேன்.

நான் கொல்லப்பட்டதாக வரும் செய்தி போலியானது” என அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இதனை இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளி அன்று செர்பியாவில் நடைபெற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் அவர் முன்னதாக அவர் சோனிபட் பகுதியில் அமைந்துள்ள சுஷில் குமார் மல்யுத்த அகாடமியில் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என போலி செய்தி பரவி இருந்தது.

இச்செய்தியால் இந்திய மக்கள் பலரும் துயரத்தில் மூழ்கிய நேரத்தில் நிஷா தாஹியா வெளியிடட காணொளியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...