தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முழுமையான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இன்று காலை 07 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில், அரச தாதியர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பகுதி நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment