ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி செயலணிக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழு தொடர்ந்து இயங்கினால் உடன் பதவி விலகுவேன்.
இவ்வாறு நீதியமைச்சர் அலி சப்ரி தனது எதிர்ப்பை அரசிடம் முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி செயலணிக் குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானது அனைத்து இனங்களுக்கும் நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு.
முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், நீதி அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் தனது எதிர்ப்பை அரசிடம் முன்வைத்துள்ளார்.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால், நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பல கட்சித் தலைவர்கள், ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் தமது விருப்பமின்மையை தெரியப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment