Raja Kollure
செய்திகள்அரசியல்இலங்கை

கட்சியிலிருந்து விலகமாட்டேன்! – ஆளுநர் ராஜா கொல்லுரே

Share

” இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று வடமேல் மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று அறிவித்தார்.

அதிபர் – ஆசிரியர்களின் போராட்டத்தை விமர்சித்திருந்த ராஜா கொல்லுரே, போராட்டம் தொடர்ந்தால் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என அறிவிப்பு விடுத்திருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்தன. கம்யூனிஸ்ட் கட்சியே போர்க்கொடி தூக்கியது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசெயற்குழு இன்று கூடியது. இதன்போது தவிசாளர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் இந்த முடிவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ராஜா கொல்லுரே,

” நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய சிலர் இன்னும் கட்சிக்குள் இருக்கின்றனர். அவர்களின் தேவைக்கேற்பவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். கட்சியில் இருந்து நான் விலகமாட்டேன்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
250822 ranil arrest 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனது...

24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...