கோள்மூட்டும் அரசியல் செய்ய எனக்குத் தெரியாது: ரொஷான் ரணசிங்க

thumb large Roshan ranasinghe

அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் எமக்கு பரவாயில்லை, எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என மொட்டு கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரொஷான் ரணசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

” எனக்கு கோள்மூட்டும் அரசியல் செய்ய தெரியாது. மைத்திரி தரப்புக்கு அது பழக்கமாக இருக்கலாம். தங்கள் அடி ‘வேறுமாதிரி’ இருக்கும் என அவர் சொன்னார். சஹ்ரானின் அடியை நாம் பார்த்தோம். மீண்டும் அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறக்கூடாது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோல அக்கட்சியில் இருந்து உறுப்பினர்கள் சிலர் வெளியேறுவதால் சிக்கலும் இல்லை.” – என்றார்.

#SrilankaNews

Exit mobile version