இந்தியாவில் உள்ள வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ பரம்பலில் 4 பச்சிளம் குழந்தைகள் சாவடைந்துள்ளன.
இந்தியாவின் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 பச்சிளம் குழந்தைகள் சாவடைந்துள்ளன..
வைத்தியசாலையில் சிறுவர்கள் சிகிச்சை பிரிவில் நேற்றிரவு குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த 36 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தீப்பரவல் காரணமாக சாவடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் சிவாராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களின் முன் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#INDIA