இலங்கையின் வாழ் மலையக தமிழ்த் தொழிலாளர்கள், நாட்டுக்கு விலையுயர்ந்த அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்றபோதும், அவர்கள் “மனிதாபிமானமற்ற மற்றும் அவமதிக்கப்படும்” சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா “தற்கால அடிமைத்தன வடிவங்கள் இனப் பரிமாணத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 200 ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டத் துறையில் பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலையக தமிழர்கள் – அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான பாகுபாடுகளை தொடர்ந்துஎதிர்கொள்கின்றனர்,” என தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை ஐ.நா அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மலையகத்தின் அவல நிலை, வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சமூகம் சர்வதேச அளவில் ஒப்பீட்டளவில் குறைவான கவனத்தைப் பெற்றுள்ளது எனவும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment