யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால் கடந்த வெள்ளிக்கிழமை இக் கற்கைநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகக் கற்கைகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு வருட பகுதி நேர கற்கையாக ஆரம்பிக்கப்படும் இந்த கற்கைநெறி துறையார் விரிவுரையாளர்கள், மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஆய்வாளர்கள் ஆகியோரால் சுயநிதிக் கற்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment