வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக சுகாதாரத் தொண்டர்களால் அமைக்கப்பட்ட போராட்டப் பந்தல் அகற்றப்பட்டுள்ளது.
தமக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி எட்டு மாதங்களுக்கு மேலாக போராடி வந்த சுகாதாரத் தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை தமது போராட்டப் பந்தலை அகற்றியுள்ளனர்.
இதேவேளை, தமக்கும் அளுநருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமது பிரச்சினைகளுக்கு தேர்வுகள் மேற்கொண்டு தருகிறேன் என ஆளுநர் உறுதி அளித்துள்ளார். அவருக்கு மதிப்பளித்து தமது போராட்டப் பந்தல் அகற்றப்பட்டது என சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்,
#SriLankaNews
Leave a comment