மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பணிப்பாளர்!!

GrDRFkEIEC7w1uYwK5kL8kzLUhsCE8b9

அறிகுறிகள் இன்றி பரவும் கொவிட் தொற்று சமூகத்தில் காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று(26) கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதாரத் துறையால் தினமும் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் நோய்த்தொற்றுடையவர்கள் நோய்த்தொற்றுக்குப் பிறகு மட்டுமே சுகாதாரத் துறையில் கண்டறியப்படுகிறார்கள் என்றும் வைரஸ் தொற்று ஏற்படாதிருக்க ஒவ்வொருவரும் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொவிட் மரணங்களின் அதிகரிப்பு நோயாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்பதையே பிரதிபலிப்பதாக விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version