கனடா நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, தெரிவாகியுள்ளார்.
ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் மகனாவார்.
இவர்அண்மையில் நடைபெற்ற கனடா நாடாளுமன்ற தேர்தலில் ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களை விட பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இவர் 2011, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (20.09.2021) நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் மூன்றாவது தடவையாக வென்றுள்ளார்.
மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளமை புலம்பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
Scarborough—Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 20 ஆயிரத்து 889 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment