இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸை வழிநடத்திய மஹ்மூத் அல்-முஹ்தாதி அமெரிக்காவில் கைது!

25 68f3da4a380d9

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ்  அமைப்பை வழிநடத்தியவர் எனக் கருதப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க விசாரணைக் குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மஹ்மூத் அமீன் என்பவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகத் தெரிவித்துக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலின்போது, ஹமாஸ் படையில் இருந்த மஹ்மூத், தற்போது அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் அமெரிக்காவில் விசா பெற பொய்கூறியும், சட்டவிரோதச் செயலிலும் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிரந்தரக் குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அவர் அமெரிக்க விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார்.

இந்த நிலையில், விசா மோசடி மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தலை விசாரிக்க, அலெக்ஸாண்ட்ரியா எம்.தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version