பாணந்துறை பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை இலக்கு வைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த நால்வரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். எனினும், அம்பியூலன்ஸ் வண்டி சாரதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அம்பியூலன்ஸ் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
துப்பாகிச்சூட்டை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
பாணந்துரை பொலிஸாரால் இதற்காக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
#SriLankaNeews